பிரபல நடிகை கௌரி கிஷனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியான 96 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கௌரி கிஷன். இதைத் தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த கௌரி கிஷன் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் தனுஷின் கர்ணன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், பிஸியாக நடித்து வரும் கௌரி கிஷனுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது. இதனை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்துள்ளார். மேலும் மருத்துவரின் அறிவுரையின்படி தான் சிகிச்சை பெற்று வருவதாகவும், ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறும் பதிவிட்டுள்ளார்.