நெல்லையில் அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் இருக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இந்நிலையில் தாமிரபரணி நதியின் கரையோரத்திலிருக்கும் கோவில்கள் மிகவும் பிரசித்திப்பெற்றதாக விளங்குகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கூடலில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் முத்துமாலை அம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்நிலையில் இக்கோவிலில் தற்போது 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இப்பூஜைக்கு வந்த பெண்கள் அனைவரும் வண்ண ஆடைகளை அணிந்துகொண்டு திருவிளக்கை கையிலேந்தி அழகோவியமாக வந்தனர். இதையடுத்து பெண்கள் அனைவரும் விளக்கேற்றி பூஜை செய்து கொண்டே சுவாமியை தரிசனம் செய்தனர்.