Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் ஏ.சி. வெடித்து ஒருவர் பலி..!!

தூத்துக்குடியில் ஏ.சி. வெடித்து தீ பிடித்ததில் ஓய்வுபெற்ற கேப்டன் ஒருவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மட்டக்கடை  சேர்ந்த ஓய்வு பெற்ற கேப்டன் ஸ்டீபன் என்பவர் வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வருவதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே  அவர்கள் வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து எட்டி பார்த்துள்ளனர். அப்போது குளிரூட்டி தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு தீயை கட்டுப்படுத்தினர்.

Related image

வீட்டினுள் ஸ்டீபன்  மயங்கிய நிலையில் கிடந்தார். இந்நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக  தெரியவந்தது. பின் அவர் உடல் பிரதே பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  அண்மைக்காலமாக குளிர்சாதனங்கள் குளிரூட்டிகள் வெடித்து வருகிறது. சென்னையில் கடந்த ஜூன் மாதம் குளிர்சாதனப் பெட்டி தீ பிடித்து செய்தியாளர் பிரசன்னா தனது தாய் மற்றும் மனைவியுடன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |