நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனாவை கட்டுவதற்காக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் விடுமுறை நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை பரவி வருவதால் ஏப்ரல் முழுவதும் அரசு விடுமுறை தினங்களிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி போட வேண்டும். இந்த உத்தரவு அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளது.