தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாமகவினர் தாங்கள் ஒவ்வொருவரும் வேட்பாளர்கள் தான் என நினைத்து, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் எத்தகைய வெற்றி அடையவேண்டும் என்று நினைத்தோமோ, அந்த வெற்றி உறுதியாகிவிட்டது. இனி நம் பணி பக்குவமாக அறுவடை செய்ய வேண்டியதுதான் என்று கூறியுள்ளார்.