Categories
உலக செய்திகள்

“கொல்லப்பட்டார் பின்லேடன் மகன் ஹம்சா” அமெரிக்கா அதிரடி தகவல்..!!

ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஒசாமா பின்லேடனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் பின்லேடன் பிரபல பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் தலைவனாவான். பின்லேடன் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயலில் ஈடுபட்டு அட்டூழியம் செய்து வந்துள்ளான். இதையடுத்து அமெரிக்க கடற்படை கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோடாபாத்தில் வைத்து அவரை சுட்டுக் கொன்றது. இதையடுத்து அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு முடிந்துவிட்டது என்று நினைக்க அவரது மகன் ஹம்சா பின் லேடன் அந்த அமைப்பை வழி நடத்துவதாக கூறப்பட்டது.

Image result for Hamza bin Laden

இந்நிலையில் அவரும் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்கா ஒரு அதிரடி தகவலை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகள் 3-பேர் பெயர் குறிப்பிடாமல் இத்தகவலை தெரிவித்ததாக என்.பி.சி தெரிவித்துள்ளது. அவர் எப்போது எங்கு கொல்லப்பட்டார் என்ற முழுவிவரமும், இதில் அமெரிக்காவில் தொடர்பு இருக்கிறதா என்ற தகவல்களையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. இதுபற்றி அதிபர் டிரம்பிடம்  இது உண்மைதானா என்று கேட்டதற்கு இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

Image result for Hamza bin Laden

ஹம்சா பின்லேடன் சவுதி அரேபியாவை சேர்ந்தவன்.   29 வயதான இவன்  ஒசாமா பின்லேடனின் 3 மனைவிகளுள் ஒருவரின் மகன். அமெரிக்கா 2017-ம் ஆண்டு இவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.  ஹம்சா பின்லேடன் மறைந்திருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்தால் 10,00,000 டாலர்  பரிசு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |