Categories
அரசியல்

மம்தா பானர்ஜியின் உடைந்த கால்…. வெளியான சந்தேகத்திற்குரிய காணொளி…. கேள்வி எழுப்பும் பாஜக…!!

மம்தா பானர்ஜி தனது உடைந்த காலை எந்த ஒரு வலியும் இல்லாமல் அசைக்கும் காணொளி வெளியாகி பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது

மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்தே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தது. அவ்வகையில் மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மூன்று வாரங்களுக்கு முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அச்சமயம் திடீரென வந்த மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்ட மம்தா பானர்ஜி கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார் இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

https://twitter.com/i/status/1377916033139310595

இந்நிலையில் தற்போது மம்தா பானர்ஜி குறித்த காணொளி ஒன்று வெளியாகி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த காணொளியில் மம்தா பானர்ஜி அவர்கள் எந்த ஒரு வலியும் அசௌகரியமும் இல்லாமல் தனது உடைந்த காலை அசைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அதுமட்டுமில்லாமல் உடைந்த காலின் மேல் மற்றொரு காலை போட்டு அவர் உட்கார்ந்திருந்தது காணொளியை பார்த்த அனைவருக்கும் ஏராளமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதனிடையே இந்த காணொளியை பாஜக தலைவர் விஷ்ணு வரதன் ரெட்டி பகிர்ந்து மம்தா பானர்ஜி அவர்கள் கால் உடைந்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் காணொளி வேறு ஒரு கதையை கூறுவதாக குறிப்பிட்டு எதை நம்புவது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பாஜகவின் செய்தி தொடர்பாளர் சுரேஷ்  “யார் உடைந்து கால்களுடன் விளையாடுவார்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்

Categories

Tech |