Categories
தேசிய செய்திகள்

பாதிப்புகள் அதிகமா இருக்கு…. ஊரடங்கு அவசியம் வேண்டும்…. எய்ம்ஸ் தலைவர் அறிவுறுத்தல்….!!

கொரோனா தோற்று பரவலை தடுக்க சிறிய அளவிலான ஊரடங்கு அவசியம் என எய்ம்ஸ் தலைவர் கூறியுள்ளார்

சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவடைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சமீப நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து எய்ம்ஸ் தலைவர் ரந்தீப் கூறுகையில் “கடந்த சில நாட்களாக தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் சிறிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்துவது அவசியமான ஒன்று. சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்காததும் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்வதுமே தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம். கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு 24 மணி நேரத்தில் இந்தியாவில் அதிகப்படியான பாதிப்பாக 81,466 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

Categories

Tech |