Categories
தேசிய செய்திகள்

மம்தா பானர்ஜி,உதயநிதி ஸ்டாலின்… இருவர்  மீதும் தேர்தல் ஆணையத்தில்…புகார் அளித்த பாஜக …!!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரான  உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவர்  மீதும் , தேர்தல் ஆணையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது 5 மாநிலங்களான   அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ,தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் 2 கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. இதற்காக அனைத்து கட்சி தலைவர்கள் ,அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் மற்றும்  எம்எல்ஏகளுக்கு ஆதரவாக , வாக்கு சேகரிக்க தலைவர்கள் வாகன பிரச்சாரத்தில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அந்தவகையில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திமுக இளைஞரணி செயலாளரான  உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது  மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் விதிகளை மீறிய உள்ளதாகவும், தமிழக திமுக கட்சியின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின்  பிரச்சாரத்தின் போது மறைந்த தலைவர்களான அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் போன்ற தலைவர்களை குறித்து தவறாக பேசியதற்காக வும் பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்

Categories

Tech |