தேர்தலை முன்னிட்டு சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள், பெயர்களை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரன், அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஜோசப், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் போட்டியிடுகின்றனர்
இதனை தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள் மற்றும் பெயர்கள் ஆகியவற்றை தேர்தல் அலுவலர் முத்துகழுவன் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மதுசூதன் ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார்.