தன் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று நடிகர் மாதவன் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரை பிரபலங்களும் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் மாதவன் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை மாதவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.