சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. தற்போது உள்ள சூழ்நிலையில் நீங்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பதிவுதான் இது இதுவரை நடைபெற்ற நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களை தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருப்பீர்கள். ஆனால் தற்போது கொரோனா பெரும் தொற்று இரண்டாவது அலை இந்தியாவில் வீசி வரு நிலையில் வரும் ஆறாம் தேதி நீங்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பதிவுதான் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் தனித்தனியே வாக்குச்சாவடிக்கு வருவதை தவிர்த்து விட்டு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக வாக்களிக்க வர வேண்டும்.
வாக்களிக்க வருவதற்குமுன் தங்கள் வீடுகளிலிருந்து புறப்படுவதற்கு முன் தங்கள் கைகளை சோப்புகள் மூலமாகவோ அல்லது கிருமிநாசினி மூலமாகவோ சுத்தம் செய்துகொண்டு நேராக நீங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும். வாக்களிக்க செல்லும் முன் தங்கள் குடும்பத்தில் உள்ள யாருக்கேனும் சளி இருமல் அல்லது காய்ச்சல் இருந்தாஇருந்தால் அவர்களை வீட்டில் எங்கே இருக்க வைத்து நீங்கள் மட்டும் வாக்குச்சாவடிக்கு வரவேண்டும்.
அங்கு வாக்குச்சாவடியில் இரண்டு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு ஒருவர் உங்களின் உடல் வெப்பநிலையை தர்மல் ஸ்கேனர் தர்மா மீட்டர் மூலம் பரிசோதனை செய்வார். மற்றொருவர் உங்களின் கைகளுக்கு கிருமிநாசினி தெளிப்பார். மேலும் தாங்கள் முகக் கவசம் அணியாமல் வந்தால் தங்களுக்கு ஒருமுக கவசமும் உங்களின் வலது கைகளுக்கு கையுறை ஒன்றும் வழங்கப்படும். இடது கைகளுக்கு கையுறை வழங்கப்படமாட்டாது. ஏனென்றால் உங்களின் இடது ஆட்காட்டி விரலில் மை வைக்க வேண்டியிருப்பதால் பின்னர் நீங்கள் வாக்குசாவடி அலுவலர்கள் தொடர்பு கொண்டு உங்களது வாக்கினை பதிவு செய்யலாம்.
வாக்குப்பதிவு செலுத்திவிட்டு வாக்குச்சாவடி மையத்திலிருந்து வெளியே செல்லும் பொழுது இரண்டு தன்னார்வலர்கள் அருகில் மெடிக்கல் வேஸ்டேஜ் டஸ்ட்பின் ஒன்று இருக்கும் அதில் தன்னார்வலர்களால் வழங்கப்பட்ட முக கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை அதில் போட்டுவிட்டு செல்ல வேண்டும். குறிப்பாக தங்கள் வீடுகளில் வாக்களிக்க தகுதி உள்ள நபர்களுக்கு சளி இருமல் காய்ச்சல் போன்றவை இருந்தால் மாலை ஆறு மணிக்கு மேல் 7 மணிகள் அவர்களை அழைத்து வந்து வாக்களித்துவிட்டு செல்லலாம்.