ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடும் மக்களின் மீது ராணுவ வீரர்கள் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு போன்ற வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மியன்மாரில் ஜனநாயக ஆட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து கடந்த 1 ஆம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது . அதனால் மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் ராணுவ வீரர்கள் ஒடுக்குமுறை என்ற பெயரில் மக்களின் மீது துப்பாக்கி சூடு போன்ற வன்முறைகளை தொடர்ந்தனர்.
அதன் பிறகு ராணுவ வீரர்கள் மேலும் மோசமான முறையில் மக்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் குண்டு வீச்சு நடத்தியத்தில் 114 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பிப்ரவரி 1ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 500 க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ ஆட்சியில் முதன் முறையாக நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த ராணுவ ஆட்சியின் மக்களின் மீதான வன்முறைத் தாக்குதலை குறித்து சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ராணுவ ஆட்சியின் மீது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அமெரிக்கா மியன்மார் நாட்டிற்கு பொருளாதார தடை விதித்திருந்த நிலையில் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகம் மியான்மரில் பணியாற்றி வரும் அமெரிக்க அரசு ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் உடனடியாக அமெரிக்காவிற்கு நாடு திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.