சூயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட எவர்கிவன் கப்பலை நீண்ட நாட்களாக போராடி வெளியில் எடுத்ததற்காக கால்வாய் ஆணையம் இழப்பீட்டு தொகையை கோரியுள்ளது.
சூயஸ் கால்வாயின் இடையில் எவர்கிவன் கப்பல் நீண்ட நாட்களாக சிக்கிக்கொண்டது. கடும் போராட்டத்திற்கு பின்பு தற்போது தான் எவர்கிவன் கப்பல் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூயஸ் நிர்வாகம் அங்கிருந்து எவர்கிவன் பயணத்தை தொடர அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது.
மேலும் கால்வாய் ஆணையம் நீண்ட நாட்களாக போக்குவரத்து முடக்கம் ஏற்படுத்திய காரணத்திற்காக ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு தொகையாக தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதில் ஒரு முடிவு கிடைத்த பின்பே பயணத்தைத் தொடர அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து சூயஸ் கால்வாயின் நிர்வாக தலைவரான உசாமா ரபி கூறியுள்ளதாவது, கப்பலை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கடுமையாக உழைத்துள்ளோம். தினந்தோறும் வருமானத்தை இழந்திருக்கிறோம். இதனால் இழப்பீட்டுத் தொகையைப் பெற எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை எவர்கிவன் கப்பல் சூயஸ் கால்வாயின் வடக்கு, தெற்கு பகுதிகளுக்கு இடையே இருக்கும் Great Bitter என்ற ஏரியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் 14 லிருந்து 15 மில்லியன் டாலர் தொகை வரை எங்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது, என்றும் கடும் முயற்சிக்கு பின்பே எவர்கிவன் கப்பல் மற்றும் அதிலிருந்த 3.4 மில்லியன் மதிப்புடைய பொருட்கள் போன்றவற்றை பாதுகாப்பாக மீட்டுள்ளோம் என்று உசாமா ரபி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் எவர்கிவன் கப்பல் பயணிப்பதில் தாமதம் ஏற்படுவதால், தைவானின் கப்பல் நிறுவனமான எவர்க்ரீன் மரைனின் தலைவர் Erir Hshie பொறுப்பு ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் சரியான சேதம் காப்பீட்டால் ஈடு கட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே சூயஸ் கால்வாய் பகுதியிலிருந்து எவர்கிவன் வெளியேற இன்னும் தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.