தினமும் புதினா மோர் குடிப்பதால் உடல் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.
தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால், தினமும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளையும், பானங்களையும் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. அதன்படி தினமும் மோர் குடித்து வந்தால் உடலில் உள்ள சூடு தணியும். உடல் குளிர்ச்சியாக இருக்கும். அதிலும் குறிப்பாக புதினா மோர் உடலுக்கு பல்வேறு சத்துக்களை தரும். அதனை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
மோர்- முக்கால் டம்ளர், புதினா, கொத்தமல்லி, இஞ்சி விழுது அரை தேக்கரண்டி, உப்பு கால் தேக்கரண்டி, ஐஸ் கட்டி- 2, எலுமிச்சைச்சாறு அரை தேக்கரண்டி.
செய்முறை:
மோர், உப்பு, புதினா, கொத்தமல்லி மற்றும் இஞ்சி விழுது ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்தால் சுவையான புதினா மோர் தயாராகும். இதனை தினமும் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் இதனை கொடுத்து வரலாம்