தேனியில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கூலி தொழிலாளியானா மணிவண்ணன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் அதனை குடித்துக்கொண்டே வந்ததால் சமீபகாலமாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் மன அழுத்தத்திற்கு சென்ற அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.
அதன்படி மதுவில் விஷம் கலந்து அதனை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மணிவண்ணனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.