Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியால் மரணமா….? மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி…. அச்சத்தில் பிரிட்டன் மக்கள்….!! …!!

அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மார்ச் 24ம் தேதியிலிருந்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி முதல் டோஸ் சுமார் 18 மில்லியன் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அதில் 30 பேருக்கு ரத்த உறைவு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பிரிட்டன் மருத்துவ கண்காணிப்பு குழு MHRA தெரிவித்துள்ளது. ஆனால் ரத்த உறைவு ஏற்பட்டது தற்செயலா இல்லை தடுப்பூசியின் பக்கவிளைவா
என்பது இதுவரை சரியாக தெரியவில்லை என்றும் இதுகுறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் ரத்த உறைவு ஏற்பட்ட 30 பேரில் 22 பேர் Cerebral Venous Thrombosis(CSTV)எனும் மூளை ரத்த உறைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி இரத்த உறைதலை ஏற்படுத்துகிறதா என்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களுக்கும் இந்தத் தடுப்பூசி செலுத்தப்படும் மற்ற நாடுகளுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |