பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த இவர் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்ற லாஸ்லியா மூன்றாவது இடத்தைப் பிடித்தார் . பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இவர் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
. #Losliya pic.twitter.com/2sqoC2NMNp
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) April 2, 2021
நடிகை லாஸ்லியா அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் கோட் சூட் அணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை லாஸ்லியா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .