Categories
உலக செய்திகள்

மியான்மர் இராணுவ அதிகாரத்திற்கு எதிரான நடவடிக்கை.. சுவிட்ஸர்லாந்து அரசு அதிரடி..!!

ஸ்விஸ் அரசாங்கம் மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக 2 மாதங்களுக்கு பிறகு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்த ராணுவ அதிகாரத்திற்கு  காரணமானவர்களாக கருதப்பட்ட சுமார் 11 நபர்கள் மீது சுவிஸ் அரசு சுமார் இரண்டு மாதங்களுக்கு பின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து அதனை எதிர்க்கும் மக்கள் மீது கடும் வன்முறை நடத்தப்பட்டு வருகிறது.

ஸ்விச் அரசாங்கம் கடந்த வாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்த பொருளாதாரத்தின் தடைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் சுவிட்சர்லாந்து, மியான்மரின் தளபதியான மின் ஆங், உயர் ராணுவ அதிகாரிகள் 9 பேர் மற்றும் தேர்தல் ஆணையத்தினுடைய தலைவர் போன்றோருக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இவர்களது சொத்துக்களும் முடக்கப்பட போகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளதாவது, மியான்மர் முழுதும் நடத்தப்பட்ட போராட்டங்களில் ஏற்பட்ட கலவரங்களில் 7 குழந்தைகளுடன் சேர்த்து சுமார் 107 நபர்கள் கடந்த சனிக்கிழமை அன்று கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆட்சி கவிழ்ப்பு நடந்த நாளிலிருந்து தற்போது வரை சுமார் 500க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |