ரமலான் மாதம் தொடங்கியதால் இஸ்லாமியர்கள் நோன்பு பின்பற்றும் காரணத்தினால் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அபுதாபியில் நேற்று அமீரகத்தில் நடைபெற இருக்கும் ரமலான் நோன்பு குறித்து பத்வா கவுன்சில் காணொளி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை அப்துல்லா பின் பய்யா என்பவர் தலைமை தாங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் பின்பற்றும் நோன்பு குறித்து வழிகாட்டுதல் கட்டுப்பாடுகள் திருக்குர்ஆனில் கூறப்பட்ட முகம்மது நபியின் மேற்கோள்கள் போன்றவைகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நோன்பு பின்பற்றும் இஸ்லாமியர்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு அனுமதி உள்ளதாக கூறப்பட்டது. இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதால் ரமலான் மாதத்தில் நோற்கும் நோன்பிற்கும் எந்தவித இடையூறும் ஏற்படாது என்று உறுதியாக தெரிவித்துள்ளனர். எனவே பத்வா கவுன்சில் அறிவிப்பில் ரமலான் மாதத்திலும் கொரோனா தடுப்பூசி வழங்கும் விகிதத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அமீரகத்தின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 24 மணி நேரத்திற்குள் 1.80 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும் ஆகையால் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 849000 உயர்ந்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் 100 க்கு சராசரியாக 85 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.