Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மன நலம் பாதித்த மூதாட்டி… பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த விவசாயி… தோட்டத்தில் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலத்திலிருக்குக்கும் ஆத்துக்காடு பகுதியில் இரண்டு நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி அதே பகுதியில் வசிக்கும் பழனிசாமி என்பவரின் விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பழனிசாமி தாரமங்கலம் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |