ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார் .
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இந்த சீரியலில் ஆதி-பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானாவுக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் திடீரென இந்த சீரியலிலிருந்து கார்த்திக் விலகிக் கொண்டதால் அவருக்கு பதில் தற்போது அக்னி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த சீரியலில் விஜய் டிவி பிரபலம் திவாகர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஷபானா, ஆக்னி ஆகியோருடன் இணைந்து திவாகர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.