பிரபல சீரியல் நடிகையின் வித்தியாசமான போட்டோ ஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெள்ளித்திரையில் துணை நடிகையாக நடித்து வந்த கிருத்திகா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பூவே பூச்சூடவா சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். இவரது திறமையான நடிப்பு பலராலும் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இவர் அவ்வப்போது வித்தியாச வித்தியாசமான புகைப்படங்களை எடுத்து அதை தனது சமூக வலை தளத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் அவர் தற்போது மிகவும் வித்தியாசமான முறையில் மயில் தொகையில் உடை அணிந்திருப்பது போல போட்டோ ஷூட் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.