Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மக்களே மறந்துவிடாதீங்க… இத செஞ்சது நாங்க தான்…. அமித்ஷா…!!!

இந்தியாவில் பல திட்டங்களால் அதிகம் பயன்படுவது தமிழகம் தான் என்பதை மறந்துவிடக் கூடாது என அமித்ஷா கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் துறைமுகங்களை மேம்படுத்தும் சாகர்மாலா திட்டத்துக்கு மட்டும் ரூ.2.5லட்சம் கோடி கொடுத்து உள்ளோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் 13 கோடி இளவரசர் சிலிண்டர்கள் வழங்கியுள்ளோம். இது போன்ற மேலும் பல திட்டங்களால் அதிகம் பயன் பெற்றது தமிழகம் தான் என்பதை மறந்து விடக்கூடாது என அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |