பெண்களை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றன. பெண்களைப் பற்றி பேச அருகதை இல்லாத கட்சி பாஜக என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பிரதமரிடம் முதல்வர் ஈபிஎஸ் கேட்டிருக்கவேண்டும். அடிமை சாசனம் எழுதி தந்தால் மத்திய அரசை, பிரதமரை அதிமுகவினர் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.