ராணிப்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியிலிருக்கும் தனியார் நிறுவனமான தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து பழனி அத்தொழிற்சாலையில் இருக்கும் கழிவுநீர் தொட்டியில் நிலைதடுமாறி தவறி விழுந்தார்.
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.