ராணிப்பேட்டையில் பறக்கும் படையினர் காரில் வந்தவரிடம் 2,40,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் வேட்பாளர்கள் வாக்கினைப் பெறுவதற்கு பொதுமக்களுக்கு பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ வழங்காமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் பறக்கும் படை அதிகாரியான ரகு தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்ததில் அவர் உரிய ஆவணங்களின்றி 2,40,000 ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்து வாலாஜா தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.