Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. சோதனையில் தூக்கிய காவல்துறையினர்…. ராணிப்பேட்டையில் அதிரும் தேர்தல் களம்….!!

ராணிப்பேட்டையில் பறக்கும் படையினர் 18,00,000 மதிப்புடைய சேலைகளை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ராணிப்பேட்டையில் பறக்கும் படையின் அதிகாரியான ரவிக்குமார் தலைமையில் காவல்துறையினர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்ததில் அவர் உரிய ஆவணங்களின்றி 18,00,000 ரூபாய் மதிப்புடைய 1097 சேலைகளை கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனை பறக்கும் படையினர் அவரிடமிருந்த புடவைகளை பறிமுதல் செய்து வாலாஜா தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

Categories

Tech |