சீனாபுரத்திலுள்ள மாட்டுச்சந்தையில் நூற்றுக்கணக்கில் விற்பனைக்காக மாடுகளை விசாயிகள் குவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சீனாபுரத்தில் மாட்டுச்சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டம் உட்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மாடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்துள்ளனர். இந்த சந்தையில் விற்பனைக்காக பசுமாடு 50-ம், அதன் கன்றுகள் 100, மற்றும் சிந்து மற்றும் ஜெர்சி மாடுகள் 75-ம் அதன் கன்றுகள் 100 ம் விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து பசு மாடும், அதன் கன்றும் மொத்தம் 20 லட்சத்துக்கும், ஜெர்சி மாடும் அதன் கன்றுகளும் 20 லட்சம் என மொத்தம் 40 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். மேலும் தேர்தல் நேரம் என்பதால் அதிக பணம் வெளியில் எடுத்து செல்ல முடியாத காரணத்தால் விற்பனை மந்தமாக உள்ளது என சந்தை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.