மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக , ஒரு சில நாட்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை, படிப்படியாக வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அங்கு ஒருநாள் தொற்றின் பாதிப்பு , 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது . இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு நேற்று 202 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸால் , அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் ,என்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பை குறித்து, நேற்று,அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆலோசனைக்கு பிறகு முதல்வர் சமூக வலைத்தளத்தின் ,மூலமாக மக்களிடையே பேசியுள்ளார். அவர் பேசியதில், மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருவதாகவும், இந்த நிலை இன்னும் தொடர்ந்தால் பாதிப்பு எண்ணிக்கை உச்சநிலையை அடையும் என்று கூறினார். நாட்டின் கொரோனா தொற்றின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில், 50% மகாராஷ்டிராவில் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு விதியை அமல்படுத்தினால் ,பொருளாதாரரீதியாக மகாராஷ்டிரா மிகவும் பாதிக்கப்படும்.
இதனால் மகாராஷ்டிரா மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஊரடங்கை அமல்படுத்த முடியாது என்று சொல்லிவிட முடியாது, எனினும் நோய்தொற்றை கட்டுப்படுத்த இன்னும் ஒருசில தினங்களில், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.மாநில பொருளாதாரத்தையும், மக்களையும் காப்பாற்றுவது அரசின் கடமையாகும். எனவே மக்கள் பொது இடங்களில் செல்லும் போது ,சமூக இடைவெளியை பின்பற்றியும் ,முக கவசம் அணிந்து ,கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டியும் அவர் கேட்டுக்கொண்டார். மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இவ்வாறு பேசினார்.