நம் வீட்டிலேயே சத்துமாவு எளிமையாக தயாரிப்பது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது ஒரு இன்றியமையாத பொருள். அவ்வாறு தினமும் உட்கொள்ளும் உணவை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு சத்து நிறைந்த உணவுகளை தருவது மிகவும் நல்லது. அவ்வாறு அனைத்து சத்துக்களையும் கொண்ட சத்துமாவு வீட்டிலேயே தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அது எப்படி தயாரிப்பது என்பது பற்றி வாருங்கள் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்:
ராகி – 2 கிலோ
சோளம் – 2 கிலோ
நாட்டு கம்பு – 2 கிலோ
பாசிப்பயறு – அரை கிலோ
கொள்ளு – அரை கிலோ
மக்காசோளம் – 2 கிலோ
பொட்டுக்கடலை – ஒரு கிலோ
சோயா – ஒரு கிலோ
தினை – அரை கிலோ
கருப்பு உளுந்து – அரை கிலோ
சம்பா கோதுமை – அரை கிலோ
நிலக்கடலை – அரை கிலோ
ஏலம் – 50 கிராம்
முந்திரி – 50 கிராம்
பாதாம் – 50 கிராம்
சுக்கு – 50 கிராம்
பிஸ்தா – 50 கிராம்
செய்முறை:
இவற்றை லேசகா வறுத்து, ஆற வைக்கவேண்டும். பின்னர் மாவு திரிப்பதற்கென இருக்கும் கடைகளில் மெஷினில் கொடுத்து பொடியாக்கிக் கொள்ளவேண்டும். இந்த சத்துமாவை தினமும் காலை மற்றும் மாலைகளில் பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடிக்கலாம். டீ, காபிக்கு சிறந்த மாற்று. அல்லது தண்ணீரில் கரைத்து காய்ச்சியும் குடிக்கலாம்.