Categories
உலக செய்திகள்

ரஷ்ய ரகசிய செயற்கைகோள் உடைந்துவிட்டதா..? அமெரிக்கா வெளியிட்ட உண்மை.. நீடித்து வரும் மர்மம்..!!

ரஷ்ய இராணுவத்திற்குரிய ரகசிய செயற்கைகோள் நடுவானில் உடைந்துவிட்டதாக அமெரிக்க விமானபடை தரவில் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. 

ரஷ்ய ராணுவத்தின் ரகசிய செயற்கைக்கோள் Kosmos 2525 கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் Plesetsk  cosmosdrome லிருந்து Soyuz 2.1-b ஏவுவாகனம் மூலமாக ஏவப்பட்டு, பூமியின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிலையில் space-track-org ல் வெளியிட்ட அமெரிக்க விமானப்படை தரவில், Kosmos 2525 என்ற செயற்கைக்கோள் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kosmos 2525 கடந்த 2018 ஆம் வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி அன்று அமெரிக்க ராணுவத்தின் படி பூமியின் வளி மண்டலத்திற்குள் சென்றுள்ளது. அதன்பின்பு தெற்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் சுமார் 4:43 GMT மணியளவில் உடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் மூன்று ஆண்டுகள் ரகசிய பணியை மேற்கொண்ட பின்பு செயற்கைக் கோள் பூமிக்கு திரும்பும் சமயத்தில் உடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை ரஷ்யா தொடர்பில்  செயற்கைக்கோள் உடைந்தது தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. எனவே செயற்கைகோள் உடைந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது.

Categories

Tech |