பாஜக வெற்றி பெற்றால் வேலை தேடுபவர்களுக்கு நண்பேன்டா என்ற இணைய தளம் அமைக்கப்படும் என வானதி சீனிவாசன் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கோவையில் பாஜக வெற்றி பெற்றால் வேலை தேடுபவர்களுக்கு நண்பேண்டா என்ற இணைய தளம் அமைக்கப்படும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் வேலை தேடுபவர்களை நிறுவனங்களுடன் இணைக்க இந்த இணையத்தளம் பயன்படும். கல்வி மற்றும் இளைஞர் நலன் சார்ந்த இந்த முன்னெடுப்பு எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். இந்த அறிவிப்பு இரண்டு ஆறுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது