Categories
சினிமா தமிழ் சினிமா

‘கொஞ்சம் கண்ணியமாக இருப்போம்’… விமர்சகர்களுக்கு ‘சுல்தான்’ பட தயாரிப்பாளர் வேண்டுகோள்…!!!

சினிமா விமர்சனங்களுக்கு சுல்தான் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படம் நேற்று வெளியானது. ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகிபாபு, சிங்கம்புலி, லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுல்தான் திரைப்படம் ஒரே நாளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் சினிமா விமர்சகர்களுக்கு சுல்தான் பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார் .

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எங்கள் பல படங்களுக்கு விமர்சகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நான் எப்போதும் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். ‘ சுல்தான்’ படம் பற்றி சிலருக்கு வேறு கருத்துகள் இருக்கலாம். நான் அதை மதிக்கிறேன். ஆனால் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் கண்ணியமாக இருப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் தட்டுகளுக்கு உணவைக் கொண்டு வருவது சினிமா மற்றும் பார்வையாளர்கள்தான்’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |