Categories
அரசியல் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருக்கோவிலூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் என்ன ?

திருக்கோவிலூர் தொகுதி தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. உலகளந்த பெருமாள் கோவில் இத்தொகுதியின் சிறப்பு அம்சமாகும். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும். பேரரசன் ராஜ ராஜ சோழன் பிறந்த ஊர் என்ற பெருமையும் உள்ளது. இத்தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயமே இருக்கிறது. நெல், மணிலா, உளுந்து, கரும்பு ஆகியவை முக்கியப் பயிர்கள்ளாக உள்ளது.

பெரிய அளவில் நிறுவனங்களும் தொழிற்சாலைகளை இல்லாத தொகுதியாகும். இந்த தொகுதி 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.மறுசீரமைப்பில் ,முகையூராக மாறிய இந்த தொகுதி மீண்டும் திருக்கோவிலூராக மாறியது. இங்கு திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும்,  காங்கிரஸ் 3 முறையும் வென்றுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ திமுகவின் துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி. தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,53,981 ஆகும்.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக நெசவு தொழில் இங்கு அதிகமாக உள்ளது. இளைஞர்கள் வேலைத்தேடி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் இப்பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும். மேலும் திருக்கோவிலூர் தொகுதியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுகின்றனர். இத்தொகுதியில் மத்திய அரசின் பாலிடெக்னிக் கல்லூரி, திருவெண்ணைநல்லூரில் அரசு கலை கல்லூரி தொடங்க அனுமதி பெற்று தந்தது, அரசு பள்ளிகளை தரம் உயர்த்தியது ஆகியவை நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளாகும். மேலும் சுகாதார நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |