தேவையான பொருட்கள்:
எலுமிச்சைச் சாறு- தேவையான அளவு.
வெல்லம்-சிறிதளவு.
தண்ணீர் -தேவையான அளவு,
ஏலக்காய்த்தூள் – தேவையான அளவு.
சுக்குப் பொடி -தேவையான அளவு.
மிளகுத் தூள் -சிறிதளவு.
செய்முறை:
வெல்லத்தை தட்டி பொடியாக்கி கொள்ளவும். அதில் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். வெல்லம் முழுமையாக கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி, மிளகுத் தூள் சேர்த்து கலக்கி சிறிது நேரம் வைத்திருந்து பருகலாம். இந்த வெயில் காலத்திற்கு இந்த பானம் இதமாக இருக்கும்.