Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தென்னை விவசாயம் செய்வது எப்படி..? வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே வேளாண் கல்லூரி மாணவிகள் தென்னை விவசாயம் குறித்து விவசாயிகளிடம் பயிற்சி பெற்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே கீழவண்ணாரிருப்பு கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் அப்பகுதியில் உள்ள ஆண்டி என்பவருடைய தென்னந்தோப்புக்கு வருகை தந்தனர். அவர்கள் அங்கு விவசாயிகளுக்கு தென்னை மரங்களில் ஏற்படக்கூடிய காண்டாமிருக வண்டுகளை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அதோடு விவசாயிகள் தென்னை விவசாயம் செய்யும் அனுபவங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும் ஏராளமான விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Categories

Tech |