கனடாவில் தமிழர் ஒருவருக்கு இரண்டாவது முறையாக லாட்டரி சீட்டு பரிசு விழுந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
கனடா ஒன்ராறியோவின் மிசிசாகா நகரில் இலங்கையை சேர்ந்த சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாட்டரி சீட்டு வாங்குவதில் மிகவும் ஈடுபாடு உடையவர். இந்நிலையில் சிவராமனுக்கு பெரிய லாட்டரி சீட்டு பரிசு பணம் 75,000 டாலர் விழுந்துள்ளது. இதுகுறித்து சிவராமன் கூறுகையில் எனக்கு இந்தப் பரிசு விழுந்ததை நம்ப முடியவில்லை என்றும் லாட்டரி டிக்கெட்டை 5 முறை ஸ்கேன் செய்து பார்த்த பிறகு தான் நம்பினேன் என்றும் கூறியுள்ளார்.
சிவராமனுக்கு ஐந்தாண்டுகளுக்கு முன் லாட்டரியில் $7,௦௦௦ பரிசு விழுந்தது என்றும் இதனால் தான் மீண்டும் மீண்டும் லாட்டரி சீட்டு வாங்குவதில் ஆர்வம் கொண்டிருந்தேன் எனவும் கூறினார். மேலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று முடிந்தபின் தனது சொந்த நாடான இலங்கைக்கு செல்ல போவதாகவும், பரிசுத்தொகை விழுந்ததை தன் மகளிடம் போன் செய்து கூறியதாகவும் அதற்கு அவள் மிகுந்த மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தாள் என்றும் கூறியுள்ளார்.