Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உங்க தாத்தா அப்பா செஞ்ச அட்டூழியம் போதாதா”… திண்டுக்கல் தொகுதியில்… அதிமுக வேட்பாளர் பரபரப்பு பிரசாரம்..!!

திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சார கூட்டத்தில் மக்கள் விரும்பும் அ.தி.மு.க. நல்லாட்சி மீண்டும் மலரும் என்று பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகர் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது முக்கிய தலைவர்கள் மற்றும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அதனை தொடர்ந்து திறந்த வேனில் நின்றபடி பழனி பைபாஸ் ரோட்டில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. தந்தை, மகன், பேரன் என மன்னராட்சியை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. கொள்ளை அடிப்பது மட்டும் தான் தி.மு.க.வின் கொள்கை. ரவுடித்தனம், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு ஆகியவற்றிற்கு பெயர் போனது தி.மு.க. கட்சி தான். அ.தி.மு.க.வினர் எங்கேயாவது அதிகாரிகளை, மக்களை மிரட்டி இருக்கிறார்களா ? நீங்களே கூறுங்கள்.

தி.மு.க. நாளுக்கு நாள் கரைந்து கொண்டே வருகிறது. தி.மு.க.வில் உள்ள தொண்டர்கள், நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். அந்தக் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு இல்லாமல் போய்விடும். தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் 2, 3 படங்களில் நடித்து விட்டு இப்போது அரசியலில் நடிக்க வந்துவிட்டார். உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியலைப் பற்றி என்ன தெரியும். தமிழக மக்கள் உங்கள் தாத்தா, தந்தை செய்த அட்டூழியத்தையே இன்னும் மறக்கவில்லை. மக்கள் வருகின்ற சட்டசபை தேர்தலில் மனசாட்சியுடன் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் விரும்பும் அ.தி.மு.க. நல்லாட்சி மீண்டும் தமிழகத்தில் மலரும்.

அ.தி.மு.க. ஆட்சியால் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனர். வருடத்துக்கு 6 சிலிண்டர்கள், விலையில்லா வாஷிங் மெஷின், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500, கேபிள் இணைப்பு, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை போன்ற எண்ணற்ற சலுகைகள் மற்றும் திட்டங்கள் உள்ளன. நாங்கள் இதனை நிறைவேற்ற தயாராக உள்ளோம். இரட்டை இலை சின்னத்துக்கு நீங்கள் ஓட்டு மட்டும் போட்டு பாருங்கள் அனைத்து வாக்குறுதிகளும் வருகின்ற ஐந்து வருடங்களில் நிறைவேற்றப்படும். மேலும் உங்களுடைய வாழ்வு வளமாகும். தமிழகத்தில் அமைதி நிலவும். இவ்வாறு அவர் பேசினார்.

Categories

Tech |