Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021 சீசனில் தொடரும் கொரோனா … சிஎஸ்கே ஸ்டாப் ஒருவருக்கு …தொற்று பாதிப்பு…!!!

14வது ஐபிஎல் போட்டியில்,வருகின்ற 10 ம் தேதி  மும்பையில் சிஎஸ்கே  –  டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதுகின்றன.

2021 ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ,வருகின்ற 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் மும்பை மைதானத்தில்10 ம் தேதி  நடைபெற உள்ள போட்டியில், சிஎஸ்கே- டெல்லி  கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்தப் போட்டிக்காக சென்னை அணி மற்றும் டெல்லி அணியை சேர்ந்த வீரர்கள் ,மும்பை  வந்துள்ளார் . இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த  ஸ்டாப் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் காரணமாக அவர் மற்ற வீரர்களிடமிருந்து தனிமைப் படுத்தப் பட்டார்.

இதன் காரணமாக  சிஎஸ்கே வீரர்களுக்கு ,எந்தவொரு பாதிப்பும் இல்லாததால் ,பயிற்சியை மேற்கொள்வார்கள் என தகவல் வெளியானது.இதேபோலவே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சேர்ந்த, சுழல் பந்து வீச்சாளரான அக்சார் பட்டேல்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த நிதிஷ் ராணா ஆகிய 2 வீரர்களும்  கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டனர் . இதைத்தொடர்ந்து மும்பை மைதானத்தில் 8 ஸ்டாப்களுக்கு  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

Categories

Tech |