பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியா வர்த்தகத்திற்கு தடை விதித்துள்ளதாக கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அமைச்சரவை முக்கிய உறுப்பினர்களுடன் பொருளாதாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்துவரும் சக்கரை பருத்தி மற்றும் பருத்தி நூல் போன்றவைகளை தற்போது இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவுடன் தற்போது பாகிஸ்தானின் சூழலைப் பொருத்து எந்த ஒரு வர்த்தகத்தையும் மேற்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளியுறவுத் துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி காஸ்மீர் குறித்த சிறப்பு முடிவை எடுக்கும் வரை இந்தியாவின் உறவுவை இயல்பாக தொடர முடியாது என்ற உறுதியாக கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் இம்ரான்கான் இந்த இறக்குமதியை தடை விதித்ததால் இதன் மூலம் நாட்டு மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்ற வகையில் அதற்கான வழிகளை கண்டுபிடித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சகத்திற்கும் பொருளாதார குழுவிற்கும் உத்தரவிட்டுள்ளார்.