இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட கனமழையால் மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 50 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் நுசா தெங்கரா என்கிற மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. ஆகையால் அங்குள்ள பல கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறுகளில் நீர் பெருகி சேரும் சகதியுமாக ஊருக்குள் புகுந்துள்ளது.
திடீரென பெய்த கனமழை மற்றும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் லாமெனேலே என்ற மலைப்பகுதியில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டு 50க்கும் மேற்பட்ட வீடுகள் மண் சரிவில் புதைந்துள்ளன. இந்த பயங்கர மண் சரிவால் வீடுகளில் இருந்த மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் சுமார் 126 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி மாயமாகி உள்ளதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமாகப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.