Categories
மாநில செய்திகள்

இன்று இரவு 7 மணிக்கு மேல் செல்லாது…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

வெளியூரிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்று அரசியல் கட்சியினர் இன்று  இரவு 7 மணிக்குமேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிட்டுக்கொண்டே வருகிறது. அதன்படி வெளியூரிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்று அரசியல் கட்சியினர் இன்று இரவு 7 மணிக்குமேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்று இரவு 7 மணி முதல் பொதுக்கூட்டம், ஊர்வலம் மற்றும் வேறு வகையில் பிரசாரம் செய்யக்கூடாது. வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள், வாகன அனுமதிகள் இன்று  இரவு 7 மணிக்குமேல் செல்லாததாகிவிடும் என்றும் அறிவித்துள்ளது.

Categories

Tech |