ஐபிஎல் போட்டியில் இந்த சீசனில் கொல்கத்தா அணியை சேர்ந்த ரிங்கு சிங்கிற்கு பதிலாக, குர்கீரத் சிங் மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2021 சீசனுக்கான போட்டி வருகின்ற 9ம் தேதி தொடங்க இருக்கிறது. ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன. எட்டு அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த ரிங்கு சிங்கிற்கு கால் மூட்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன்காரணமாக இந்த ஐபிஎல் சீசன் நடைபெறும் போட்டிகளில் அவர் பங்கு பெற மாட்டார் என்று தகவல் வெளியானது.
இந்த காரணத்தால் கொல்கத்தா அணியில் ,குர்கீரத் சிங் மான் இடம்பெறுவார் என்ற தகவல் வெளியாகியது . குர்கீரத் சிங் மான் கடந்த சீசன்களில் ,இவர் பெங்களூர் அணிக்காக விளையாடி உள்ளார். ஐபிஎல் போட்டிக்காக நடத்தப்பட்ட ஏலத்தில் ,எந்தவொரு அணியும் அவரை தேர்ந்தெடுத்தால் தற்போது அவர் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ளார்.