நடிகர் கார்த்தி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான படம் சுல்தான். இந்நிலையில் நேற்று சுல்தான் படம் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே வசூல் மாஸ்டர் படத்துக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான சுல்தான் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 6 கோடி வசூல் செய்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
வார இறுதி வசூல் இதைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் படக்குழுவினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.