Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயப்படாம இதை செய்யுங்க… பாதுகாப்புக்கு நாங்க இருக்கோம்… திண்டுக்கல்லில் கொடி அணிவகுப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் கொடி அணிவகுப்பும் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பழனியில் துணை ராணுவ படையினர் மற்றும் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தார். பழனி தேரடி பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

Categories

Tech |