Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஊழலை ஒழிக்க பிறந்த ஊரிலிருந்து தொடங்குகிறேன்”… வேடமணிந்து வாக்கு சேகரித்த… சின்னத்திரை நடிகர்..!!

சின்னத்திரை நடிகர் முனிஸ்ராஜ் வேடமணிந்து பழனியில் வாக்கு சேகரித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பழனி அடிவார பகுதியில் கடந்த 1-ம் தேதி சுயேச்சையாக போட்டியிடும் சின்னத்திரை நடிகர் முனிராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் தனக்கு வாக்களிக்கும்படி வேடமணிந்து வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரத்தை வழங்கினார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள், பெண்கள் அவருடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அப்போது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அவரிடம் கேட்ட போது, ஊழலை ஒழிக்க பிறந்த ஊர் பழனி. ஆதலால் பழனியிலிருந்து தனது பயணத்தை தொடங்குவதாக கூறியுள்ளார்.

Categories

Tech |