தேனியில் பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக போட்டியிடும் எம்.முருகன் அப்பகுதி பொதுமக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவரவர் நிற்கும் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக போட்டியிடும் எம்.முருகன் அத்தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசாங்கம் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக பல திட்டங்களை நிறைவேற்றி வருவதோடு மட்டுமல்லாமல் சிறப்புவாய்ந்த ஆட்சியிணையும் கொடுக்கிறது.
எனவே அனைத்து மக்களும் தற்போது நடைபெறவிருக்கின்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான இடங்களில் அ.தி.மு.க கட்சியினை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க அரசாங்கம் மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது என்றார். மேலும் அவர் பல நலத்திட்டங்களை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் வாக்கினைப் சேகரித்தார்.