Categories
சினிமா தமிழ் சினிமா

வீரப்பனின் மகள் திரைப்படம்…. வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!

பிரபல கடத்தல் தலைவன் வீரப்பனின் மகள் திரைப்படம் வெளியாக உள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர் பிரபல சந்தன கடத்தல் தலைவர் வீரப்பன். இவருக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். இவரது மகளான வித்யா ராணி பா,ஜனதா கட்சியில் 2 ஆண்டுகளாக இணைந்துள்ளார். மேலும் இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார்.

அதன்படி கே.என்.ஆர்.ராஜா இயக்கும் “மாவீரன் பிள்ளை” என்ற படத்தில்தான் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி நடித்துள்ளார். மது ஒழிப்பு, தண்ணீர் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளை எதிர்த்து முன் நின்று போராட்டம் நடத்தும் போராளி கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடித்துள்ளார்.

மாவீரன் பிள்ளை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜயலட்சுமி துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து நின்று கொண்டிருக்கிறார். ஆகையால் வீரப்பனின் மகளின் இப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

Categories

Tech |