மதுரையில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கிருஷ்ணா வேளாண்மை காலேஜ் அமைந்துள்ளது. இந்நிலையில் இக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் சோழவந்தானில் முகாம் போட்டு தங்கி அப்பகுதியிலிருக்கும் விவசாயிகளுக்கு விவசாய செயல்முறை விளக்கத்தை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் தென்னை மரங்களில் பரவக்கூடிய நோய்களை கட்டுப்படுத்தி அவற்றின் மகசூலை பெருக்கும் விதமாகவும் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு தென்னை வேரூட்டம்செயல் விளக்கத்தினை அளித்தனர். அதாவது ஒரு தென்னை மரத்திற்கு 200 மில்லி கணக்கில் தென்னை வேரூட்ட டானிக்கை வருடத்திற்கு இரண்டு முறை செலுத்த வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.